போக்குவரத்து கழகத்திற்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

share on:
Classic

போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கான பணியிடங்களுக்கான தேர்வு எந்த அடிப்படையில் நடத்தப்படுகிறது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர்களை நியமிப்பது வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பாதாக, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கோவை சாமி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், போக்குவரத்து கழகத்தில் குருப்-சி பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலமே நிரப்ப வேண்டும் என கடந்த 2012 ம் ஆண்டு தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து, கடந்த 2014 ம் ஆண்டு தாக்கல் செய்த மேல்முறைட்டு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து கழகத்தில் ஊழியர்களை நியமிக்க எந்த அடிப்படையில் நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், போக்குவரத்து கழக ஊழியர்கள் நியமனத்தில், வேலைவாப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறதா?  என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக போக்குவரத்து கழகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 4 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev