8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிரான வழக்கில் எப்போது தீர்ப்பு..?

share on:
Classic

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை ஏப்ரல் 8-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் வழங்குகிறது.

சென்னை- சேலம் இடையே 10,000 கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1900 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரியும், திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் ஐந்து மாவட்ட விவசாயிகள், தர்மபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் 6 மாதங்களுக்கு மேலாக நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் இந்த திட்டத்திற்காக ஐந்து மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதேபோல, இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுசுழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் இத்திட்டத்தை தொடர மாட்டோம் என மத்திய அரசும் உத்தரவாதம் அளித்திருந்தது.

இதற்கிடையில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொது மக்கள் துன்புறுத்தப்பட்டது குறித்து சிபிசிஐடி - எஸ்.பி பிரவின் குமார் மேற்பார்வையில் டி.எஸ்.பி முருகவேல் விசாரணை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை வரும் 8ம் தேதி வழங்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind