பால் கலப்படத்தை நீதிமன்றம் கண் மூடி வேடிக்கை பார்க்காது என எச்சரிக்கை

share on:
Classic

பால் கலப்படத்தை நீதிமன்றம் கண் மூடி வேடிக்கை பார்க்காது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பால் கலப்பட வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான பாலில், கலப்படம் செய்வது ஆரோக்கியத்திற்கு விடுக்கப்படும் மிரட்டல் என தெரிவித்த நீதிபதிகள். அதை கண்மூடிக் கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம் என எச்சரித்தனர்.

பால் கலப்படம் குறித்து தொடரப்பட்ட வழக்குகளின் விபரங்களை பிப்ரவரி 25ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நடவடிக்கைகளில் திருப்தியடையாவிட்டால் சுகாதாரத்துறை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். 

News Counter: 
100
Loading...

youtube