மதுரை : 576 வாழை மரங்கள் வெட்டிசாய்க்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

share on:
Classic

கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் 576 வாழை மரங்களை வெட்டி சாய்த்த சம்பவம் மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வடக்குவலையபட்டியை சேர்ந்தவர் விவசாயி ஜெயபால். இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த மகாராஜா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கொடுக்கல், வாங்கல் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவில் ஜெயபாலின் 40 சென்ட் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பீலான 576 வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்துவிட்டு சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இது தொடர்பாக ஜெயபால் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த மகாராஜன், ஜெயராமன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 5 அரிவாள்களையும் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் 576 வாழை மரங்கள் வெட்டிசாய்க்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan