இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

share on:
Classic

ராஜராஜசோழன் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், இயக்குனர் பா. ரஞ்சித்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மன்னர் ராஜராஜசோழன் குறித்து விமர்சித்த விவகாரம் தொடர்பாக அளித்த புகாரின்பேரில் பா.ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி பா.ரஞ்சித், உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுத்தாக்கல் செய்தார். ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு ராஜராஜசோழன் குறித்து விமர்சனம் செய்தது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பியதுடன், ரஞ்சித் மீதான வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையின் போது, இயக்குனர் பா. ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இனி வருங்காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேச கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan