மருத்துவர்களின் கோரிக்கைகள் மீதான பரிந்துரைகள் தொடர்பாக தமிழக அரசுக்கு புதிய உத்தரவு

share on:
Classic

மருத்துவர்களின் கோரிக்கைகள் மீதான பரிந்துரைகள் தொடர்பாக ஜனவரி 27-ம் தேதிக்குள் உரிய முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

கோமதிபுரத்தைச் சேர்ந்த முகமது யுனீஸ் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில், மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டுமென்பது நீதிமன்றத்தின் விருப்பமல்ல என்றும், அரசு இந்த விஷயத்தில் உரிய முடிவெடுக்க தவறினால் வழக்கை தள்ளுபடி செய்ய நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

இந்நிலையில் இன்று வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள்ளாக உரிய முடிவெடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஜனவரி 27 ஆம் தேதிக்குள் மருத்துவர்கள் கோரிக்கையின் பரிந்துரைகள் தொடர்பாக உரிய முடிவெடுத்து அதனை 28-ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.
 

News Counter: 
100
Loading...

aravind