மதுரை "தேர்தல் தேதியை மாற்ற முடியாது" பதிலாக, வாக்குப்பதிவுக்கு 2 மணிநேரம் அதிகரிக்கரிப்பு..!!

share on:
Classic

மதுரையில் தேர்தல் தேதியை மாற்றியமைக்க மறுப்பு தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் கூடுதலாக அதிகரிக்கத் தயார் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் புகழ்பெற்ற கள்ளழகர் திருவிழா ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், மதுரையில் தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது தேர்தல் தேதியை மாற்றியமைக்க முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வாக்குப்பதிவுக்கான நேரத்தை 2 மணிநேரம் கூடுதலாக அதிகரிக்கத் தயார் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், திருவிழா நடைபெறும் தேதியில் தேர்தல் நடத்தினால், 51 வாக்குப்பதிவு மையங்களிலும் பொதுமக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என கேள்வி எழுப்பினார். மேலும், விழா பாதிக்கப்படுவதுடன், தேர்தலும் பாதிக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், நாளைக்குள் பதில்மனு தாக்கல் செய்யத் தவறினால், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan