அரசு செவிலியர் இடமாறுதல் கலந்தாய்விற்கு இடைக்கால தடை

Classic

நாளை நடைபெறவிருந்த அரசு செவிலியர் இடமாறுதல் கலந்தாய்விற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. 

தமிழ்நாடு சுகாதாரதுறை ஊழியர்கள் நலச்சங்க செயலர் கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், செவிலியர் கலந்தாய்வு இடமாறுதல் அறிவிப்பாணை ஜனவரி 7ஆம் தேதி வெளியிடப்பட்டு, 11ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் சேவை சான்றிதழ் பெறமுடியவில்லை என கூறியிருந்தார்.

மேலும், காலியிடங்கள் குறித்த தெளிவாக குறிப்பிடப்படாமல் அவசர கதியில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், முறையாக வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்றும் கூறியிருந்தார். செவிலியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு  நடப்பது முன்கூட்டியே சிலருக்கு தெரிந்திருப்பதால், முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சுப்பரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை நடைபெற இருந்த இடமாறுதல் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

News Counter: 
100
Loading...

sasikanth