கமல் விவகாரம் : மனுவை விசாரணைக்கு ஏற்க மதுரை உயர்நீதிமன்றம் மறுப்பு..!

share on:
Classic

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் தேர்தல் பரப்புரைக்கு தடை கோரிய வழக்கை விசாரணைக்கு ஏற்க மதுரை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

அரவக்குறிச்சியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கமல் ஹாசன் நாட்டின் முதல் தீவிரவாதி இந்து என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இந்த விவகாரம் பா.ஜ.கவினர் இடையே கொந்தளிப்பை ஏற்பத்தியது. இந்நிலையில், பொது அமைதியை குலைப்பதாக கூறி கமலின் பரப்புரைக்கு தடை விதிக்க சரவணன் என்ற வழக்கறிஞர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டினர். கமல் விவகாரத்தில் குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என மறுப்பு தெரிவித்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan