ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதியளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவு..!

share on:
Classic

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக மனிதசங்கிலி போராட்டம் நடத்த அனுமதியளிக்குமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை, மனித சங்கிலி போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி லெனின் என்பவர் மனு அளித்தார். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், போராட்டத்துக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, போராட்டம் நடைபெற இருப்பது 600 கிலோ மீட்டர் தூரம் என்பதால், போதிய பாதுகாப்பு வழங்க இயலாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, போராட்டம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை என்றும், மனித சங்கிலி போன்ற அமைதியான போராட்டதுக்கு அனுமதியளிக்கலாம் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, வரும் 23-ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

News Counter: 
100
Loading...

Ragavan