ஃபிளக்ஸ், பேனர்கள் வைக்கத் தடை..! அரசியல் கட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி...

share on:
Classic

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனர்கள், கட் அவுட்கள் வைக்க அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஃபிளக்ஸ், பேனர்கள் வைப்பது தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசியல் கட்சிகளுக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளனர். தமிழக அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களின் போது, கட் அவுட்கள், பேனர்கள் வைக்கக் கூடாது என தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் கட் அவுட்கள், பேனர்கள் வைக்கத் தடை விதித்து உத்தரவிட்டனர். அதுமட்டுமல்லாமல், பொதுக்கூட்டங்கள் எனக் கூறிக்கொண்டு அரசியல் கட்சியினர், பொதுமக்களை கூட்டம், கூட்டமாக வாகனத்தில் அழைத்து வரவும் நீதிபதிகள் தடை விதித்துள்ளனர். இந்த வழக்கில் அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்மனுதாரராக சேர்த்துள்ளதுடன், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

News Counter: 
100
Loading...

Ragavan