விமர்சையாக நடைபெற்ற கள்ளழகர் எதிர்சேவை..!

share on:
Classic

மதுரை மாநகரில் கள்ளழகர் எதிர்சேவை வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதிகாலை வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 
மதுரை சித்திரை திருவிழாவினை முன்னிட்டு இன்று பிரமாண்டமாக எதிர்சேவை நடைபெற்றது. எதிர்சேவையின் போது பக்தர்கள் கருப்பசாமி வேடமிட்டு ஆடல்பாடல்களுடன் வரவேற்றனர். பெண்கள் கையில் நெய் தீபம் ஏந்தியபடி அழகரை வரவேற்றனர். நள்ளிரவில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து தங்கக்குதிரை வாகனத்தில் அருள்பாலிப்பார். 

இதனைத் தொடர்ந்து அதிகாலையில், வைகை ஆற்றில் உள்ள மண்டகப்படியில் பட்டுடுத்தி எழுந்தருள்கிறார். பின்னர் மதிச்சியம் ராமராயர் மண்டகப்படிக்கு செல்கிறார். அங்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

 

News Counter: 
100
Loading...

aravind