பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்..!

share on:
Classic

மதுரை சித்திரைத் திருவிழாவில் பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டுகளித்தனர்.

மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. நாள்தோறும் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் பல்வேறு அலங்காரங்களில் திருவீதி உலா வந்தனர். இந்நிலையில், விழாவின் முக்கிய நிக்ழவாக கள்ளழகர் அற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சரியாக அதிகாலை 5 மணி 50 நிமிடத்துக்கு பச்சைப்பட்டு உடுத்திய கள்ளழகர், பக்தர்களின் கோவிந்த முழக்கத்துடன் வைகையாற்றில் இறங்கினார். அப்போது, சர்க்கரை கிண்ணத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆரத்தி எடுத்து அவரை வழிபட்டனர்.

News Counter: 
100
Loading...

Ragavan