மதுரை ரயில் நிலையம் முற்றுகை.., விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட கோரிக்கை..!

share on:
Classic

மதுரை சர்வதேச விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டக் கோரி, ஃபார்வர்டு பிளாக் கட்சியினர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை சர்வதேச விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டக் கோரி ஃபார்வர்டு பிளாக் கட்சியினர் மற்றும் சில அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரிக்கையை வலியுறுத்தி தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன், மூவேந்தர் முன்னேற்றக் கழக கட்சியின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர், மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, ரயில் நிலையத்துக்குள் நுழைய முற்பட்ட போராட்டக்காரர்களை, போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். இதனால், மதுரை ரயில் நிலையம் பரபரப்பாகக் காணப்பட்டது.

News Counter: 
100
Loading...

Ragavan