மதுரை : கல் உடைக்கும் தொழிலாளர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு முன்வர கோரிக்கை..!

share on:
Classic

கிரைண்டர் மிக்சி மோகத்தால் நலிந்து வரும் அம்மிக்கல், ஆட்டுக்கல் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு முன்வர வேண்டும் என கல் உடைக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள ஒத்தப்பட்டி கிராமத்தில், கடந்த 20 ஆண்டுகளாக  கல் உடைக்கும் தொழிலாளர்கள் அம்மிக்கல், ஆட்டுகல் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். காலமாற்றத்தால், தற்போது மக்கள் கிரைண்டர், மிக்சி உள்ளிட்டவற்றை  மக்கள் விரும்பி வாங்கி செல்வதால், அம்மிக்கல் ஆட்டுக்கல் வியாபாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதற்கான தீர்வாக, தங்களுக்கு மாற்று தொழில் தொடங்க அரசு  உதவவேண்டும் என கல்உடைக்கும் தொழிலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan