’மகரிஷி’ படத்தின் சென்சார் தகவல் வெளியீடு..!!

share on:
Classic

மகரிஷி படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது.

டோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் மகேஷ் பாபு. இவர் இப்போது தெலுங்கில்  மகரிஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ராஜ குமாருடு என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான மகேஷ் பாபுக்கு மகரிஷி 25-வது படம். வம்சி பைடிப்பள்ளி இயக்கிவரும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, மகேஷ்பாபு நண்பன் கேரக்டரில் அல்லரி நரேஷ் நடித்துள்ளார். 

சமீபத்தில் மகரிஷி  படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்போது இந்த படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது.  மகரிஷி படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.  இதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் மேலும் ஒரு பாடலான தி சோல் ஆப் ரிஷி என்ற தீம் பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியிருக்கும் இந்த மகரிஷி படம் வரும் மே 9 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan