கைகலப்பான முன்விரோதம்: காவலர்கள் குடும்பத்தினரிடையே பயங்கர மோதல்

share on:
Classic

மகாராஷ்டிரா  மாநிலம் அவுரங்காபாத்தில் காவலர்களின் குடும்பத்தினரிடையே பயங்கர மோதலில், ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர்.

மஹாராஷ்ட்ர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள குடியிருப்பில், காவலர் குடும்பத்தினர் 2 பேருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்களிடையே திடீரென கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது, ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

aravind