காந்தியடிகளே ஒரு இந்து தீவிரவாதி தான் : கோட்சே பயங்கரவாதி எனவும் திருமாவளவன் கருத்து..

share on:
Classic

மகாத்மா காந்தியே ஒரு இந்து தீவிரவாதி தான் என்றும், நாதுராம் கோட்சே பயங்கரவாதி என்றும் திருமாவளவன் கூறியுள்ளார். 

முள்ளிவாய்க்காலில் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஈழ தமிழர்களுக்கு 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சென்னை அசோக் நகரில் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன், இந்துமதத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டவர் மகாத்மாக காந்தி என அம்பேத்கர் மற்றும் பெரியார் கூறியுள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “ கமல்ஹாசனுக்கும் நமக்கும் முரண்பாடு இருந்தாலும், அவரை நான் ஆதரிக்கிறேன். அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி என்று கமல் சொல்லியுள்ளார். ஒருபடி மேலே போய் அவரை பயங்கரவாதி என்று தான் சொல்லியிருக்க வேண்டும். நான் சொல்கிறேன் காந்தியடிகளே ஒரு இந்து தீவிரவாதி தான், காந்தியை கொன்ற கோட்சே இந்து பயங்கரவாதி. இந்து மதத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியினால் இதனை நான் சொல்லவில்லை ” என்று தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya