ஆபத்தை உணராமல் தனிப்பட்ட தகவல்களை பிறரிடம் பகிரும் இந்தியர்கள்...!

share on:
Classic

சலுகை விலைக்கு ஆசைப்பட்டு, பெரும்பாலான இந்தியர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களை வெகு எளிதாக பிறரிடம் பகிர்ந்துகொள்வதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனிப்பட்ட தகவல்களை பிறரிடம் பகிர்ந்துகொள்பவர்கள் குறித்து பிரபல தனியார் நிறுவனம் ஒன்று சர்வதேச அளவில் ஆய்வு நடத்தியது. மொத்தம் 28 வணிக சந்தைகளில் 2,000 இந்தியர்கள் உட்பட 47,000 பேர் இதில் கலந்துகொண்டனர். இந்த ஆய்வு முடிவில், 10-ல் 7 இந்தியர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களை எளிதாக பிறரிடம் பகிர்ந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வங்கிகளிடமும், காப்பீட்டு நிறுவனங்களிடமும், தள்ளுபடி விலையில் பொருட்களை விற்கும் கடைகளிடமும் இந்தியர்கள் அவர்களது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துகொள்ளும் விகிதம் கணிசமாக இருப்பதாகவும் அந்த அய்வில் கூறப்பட்டுள்ளது. 

News Counter: 
100
Loading...

mayakumar