அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க கோரிக்கை..!

share on:
Classic

அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளது. 

சிறுபான்மையின வாக்குகளை பெறுவதற்காக, சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என சர்ச்சைக்குரிய கருத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி அளித்திருந்தார். 

இதனிடையே கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என கூறியதற்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind