ராஜேந்திர பாலாஜி வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ம.நீ.ம புகார்..!

share on:
Classic

வன்முறையை தூண்டும் வகையில் கண்ணிய குறைவாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் நீதி மையம் கட்சியினர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை கண்டித்து வன்முறையைத் தூண்டும் வகையில் கண்ணிய குறைவாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாகவும் பேசியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து அத்துமீறி பேசிய ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan