அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார்..!

share on:
Classic

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் கோட்சே குறித்த கருத்துக்களை பேசினார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனிடையே, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'கமல்ஹாசனின் கொழுப்பெடுத்த நாக்கை அறுத்துவிடுவேன்' என்று வன்முறையை தூண்டும் விதமாக, கொலை மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசியதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மக்கள் நீதி மய்யம் சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan