மலேசியா : 30 ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றம்..!

share on:
Classic

மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகளை கட்டுபடுத்தும் விதமாக அந்நாட்டின் சாபா மாநிலத்தில், கடந்த 1990 முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரம் குடியேறிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இது குறித்து பேசியுள்ள சாபா தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் இயக்குனர் சலேஹா ஹபிப் யூசப், சட்டவிரோத குடியேறிகள் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்புவது சட்டவிரோத குடியேற்ற பிரச்னையை கையாள்வதில் அரசு காட்டும் தொடர் அக்கறையின் காரணமாக நிகழ்வது எனக் குறிப்பிட்டிருக்கிறார். தேசிய பாதுகாப்பு கவுன்சில், குடிவரவுத்துறை, ராயல் மலேசிய காவல்துறை, கிழக்கு சாபா பாதுகாப்பு கட்டளை, மலேசிய கடல் அமலாக்க ஏஜென்சி உள்ளிட்டவை சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து பிடிப்பதற்கு செயல்திறன்மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு மலேசியாவின் சாபா மாநிலத்திலிருந்து 13,479 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு கவுன்சிலின் இயக்குனர், இந்த ஆண்டு இதுவரை 4,115 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். சட்டவிரோத குடியேறிகளை பாதுகாப்பது, வேலைக்கு அமரத்துவது, அனுமதிப்பது மலேசியாவின் குடிவரவு சட்டத்தின்படி கடும் குற்றமாகும். மலேசியாவின் கடலோர பகுதியான சாபாவுக்குள், அருகாமையில் உள்ள வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சட்டவிரோத குடியேறிகள் வரும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தேறி வருகின்றது. 

News Counter: 
100
Loading...

aravind