PUBG-யால் சீரழிந்த குடும்பம்...கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம் !!

Classic

PUBG விளையாடுவதற்கு தடையாக இருந்த மனைவியின் மேல் கோபப்பட்டு, வீட்டை விட்டு வெளியேறிய மலேசிய இளைஞர், ஒரு மாதம் ஆகியும் வீடு திரும்பாத சோக சம்பவம் நடந்துள்ளது.

PUBG வெறியர் :
மலேசியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இயல்பாகவே மொபைல் கேம்ஸ்களில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். தன் சகோதரரின் மூலம் PUBG விளையாட்டை பற்றி சமீபத்தில் அறிந்து கொண்டிருக்கிறார். அந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்தவர் கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு அடிமையாகத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் வேறு எதிலுமே கவனம் செலுத்த முடியாமல் எப்போதும் ஃபோனும் கையுமாகவே சுற்றியுள்ளார். இதனால் மிகவும் கவலையடைந்த அவரது கர்ப்பிணி மனைவி அவரை கண்டித்துள்ளார்.

 

ஒரு மாதம் ஆகிறது: 
’என்ன சொன்னாலும் திருந்த மாட்டேன்’ என்றவர் திரும்பவும் அதே செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்பு, ஒரு நாள் இதேபோல் PUBG விளையாடிக் கொண்டிருந்தவரை அவரது மனைவி திட்ட ஆரம்பித்துள்ளார். ’இந்த வீட்டில் நிம்மதியாக PUBG கூட விளையாட முடியவில்லை’ என்று நினைத்தவர், மொபைலை தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டார். அவ்வளவு தான், அவர் எங்கு சென்றாரோ தெரியவில்லை. ஒரு மாதம் ஆகியும் இன்னும் வீடு வந்து சேரவே இல்லை. 

 

பேஸ்புக் பதிவு :
இதனால் கடும் மனவேதனை அடைந்த அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் பேஸ்புக்கில் காணாமல் போன தன் கணவரை பார்த்தால் தெரிவிக்கும்படி மலாய் மொழியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் " PUBG விளையாட ஆரம்பிப்பதற்கு முன் என் கணவர் இது போல் இல்லை. இன்று என் குடும்பமே கவலையில் மூழ்கியுள்ளது. என் கணவர் கிடைத்துவிட பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் " என்று பரிதாபமாக கூறியுளளார்.

 

தடை :
சுவாரஸ்யமான இந்த விளையாட்டிற்கு இளைஞர்கள் பலரும் அடிமைகளாக உள்ளனர். அதில் மூழ்கினால் சாப்பாடு, தண்ணீர் கூட வேண்டாம் என்று ஒரே அடியாக மூழ்கி விடுகின்றனர். இந்த நிலைமையை கட்டுப்படுத்தவே சமீபத்தில் கூட பள்ளி மாணவர்கள் PUBG விளையாடுவதற்கு குஜராத் அரசு தடை விதித்தது. அதே போல் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற VIT பல்கலைக்கழகம் கூட மாணவர்கள் PUBG விளையாட தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

 

News Counter: 
100
Loading...

priya