சாத்வி பிராக்யா சிங்கிற்கு தேர்தல் போட்டியிட தடை விதிக்குமாறு முறையீடு

share on:
Classic

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாத்வி பிராக்யா சிங்க்கிற்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது.

2008 ஆண்டு நிகழ்ந்த மாலேகான் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்படும் சாத்வி பிராக்யா சிங்கை போபால் தொகுதி வேட்பாளராக பா.ஜ.க அறிவித்துள்ளது. அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட சாத்வி பிராக்யாவிற்கு தடை விதிக்குமாறு காங்கிரஸ் நிர்வாகி தெஹ்சீன் பூனாவாலா மனு அளித்துள்ளார். மாலேகாண் குண்டு வெடிப்பு வழக்கில் சாத்வி பிராக்யாவை முக்கிய குற்றவாளியாக மஹாராஷ்டிராவின் தீவிரவாத தடுப்புப் படை ஏற்கனவே அறிவித்திருந்ததை சுட்டிக்காட்டிய அவர், போபால் தொகுதியில் சாத்விக்கு தடை விதிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். போபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கிற்கு எதிராக பா.ஜ.க சார்பில் சாத்வி பிராக்யா களமிறக்கட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ragavan