வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு : பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்..

share on:
Classic

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் வாக்குப்பதிவு தாமதமனாது. சென்னை ஆழ்வேர்பேட்டை, தேனி மாவட்டம் பெரியகுளம், காஞ்சிபுரம் 43வது வார்டு, தூத்துக்குடி வல்லநாட்டு வாக்குச்சாவடி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல பகுதிகளில் இயந்திரங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. திருச்சியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யாதாதால் அங்கு வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவாயற்பாடி, மதுரை ஆகிய இடங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. தஞ்சை, மணப்பாறை, வேலூர் ஆகிய இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தாமதமானது. மற்ற பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

News Counter: 
100
Loading...

Ramya