இந்தியாவில் மால்வேர் சைபர் தாக்குதல்... பாதுகாப்பான நாடு எது...?

share on:
Classic

சைபர் தாக்குதல் நடைபெறும் நாடுகளுக்கான பட்டியலில் ஜப்பான் முதலிடத்தையும், இந்தியா 15-வது இடத்தையும் பிடித்துள்ளன.  

15-வது இடம்:
மால்வேர் சைபர் தாக்குதல்கள் அதிகளவில் நடைபெறும் உலக நாடுகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 60 நாடுகளைக் கொண்டுள்ள இந்த பட்டியலில் இந்தியா 15-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள 25% செல்ஃபோன்களும், 21% கணிப்பொறிகளும் மால்வேர் தாக்குதலுக்கு உள்ளாவதன் காரணமாகவே 15-வது இடத்தை வசப்படுத்தியுள்ளது. இதன் மொத்த சைபர் தாக்குதல் விகிதம் 39% ஆகும். இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் அதிகப்படியான சைபர் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. 

 

பாதுகாப்பான நாடு:
சைபர் தாக்குதலில் இருந்து மிகவும் பாதுகாப்பாக உள்ள நாடு என்ற பெருமை ஜப்பானுக்கு கிடைத்துள்ளது. ஜப்பானில் உள்ள 1.34% செல்ஃபோன்களும், 8% கணிப்பொறிகள் மட்டுமே மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. ஜப்பானைப் போன்று, ஃபிரான்ஸ், கனடா, டென்மார்க் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வலுவான சைபர் பாதுகாப்பைக் கொண்டுள்ளன. 

 

ஜெர்மனியில் வங்கி மால்வேர்:
தொழில்நுட்பங்களுக்கு மிகவும் பேர் போன நாடாக கருதப்படும் ஜெர்மனியில் நிதியியல் சார்ந்த இணைய நடவடிக்கையின் போது தான் அதிகளவில் மால்வேர் தாக்குதல் நடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வங்கி மூலமான பணப்பரிவர்த்தனையின் போது தான் மால்வேர் தாக்குதல்கள் அதிகப்படியாக இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

News Counter: 
100
Loading...

mayakumar