சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலையை சீரமைத்து திறந்து வைக்கிறார் மம்தா..!

share on:
Classic

கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலையை சீரமைத்து அம்மாநில முதலமைச்சர் மம்தா மீண்டும் திறக்க உள்ளார்.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் மே 14-ஆம் தேதி அமித்ஷாவின் தேர்தல் பிரச்சாரத்தில், பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் இடையே கலவரம் மூண்டது. அப்போது சமூக சீர்த்திருத்தவாதி வித்யாசாகரின் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தினர். அனைவராலும் மதிக்கப்படும் வித்யாசாகர் சிலை தேசப்படுத்தப்பட்டது, அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பின் நடந்த மாநாட்டில் ஐம்பொன்னால் சிலை, மீண்டும் சீரமைக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். இதை ஏற்க மறுத்த அம்மாநில முதலமைச்சர் மம்தா, புதிய சிலையை நிறுவ தங்களிடம் பணம் இருப்பதாக கூறிவிட்டார். இந்த நிலையில் வித்யாசாகர் சிலை சீரமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட உள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan