துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் : டிக்டாக் வீடியோவால் நேர்ந்த கொடூரம்..

share on:
Classic

துப்பாக்கியை வைத்து டிக்டாக் வீடியோ பதிவு செய்த போது தவறுதலாக சுட்டதால் 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சல்மான், சுஹைல், அமீர் ஆகிய மூன்று நண்பர்கள் இந்தியா கேட் பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். வீடு திரும்பும் போது நாட்டு துப்பாக்கியை வைத்து டிக்டாக் வீடியோவை பதிவு செய்துள்ளனர். அப்போது சுஹைல் கையிலிருந்த துப்பாக்கி தவறுதலாக சுடப்பட்டதில் சல்மான் பலத்த காயமடைந்துள்ளார். உடனே மருத்துவமனைக்கு அவரை அனுமதித்துவிட்டு மற்ற இருவரும் அங்கிருந்து கிளம்பியுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சல்மான் உயிரிழந்துள்ளார். துப்பாக்கி, ரத்தக்கறை படிந்த சட்டைகள் ஆகிய சாட்சியங்களை மற்ற இருவரும் மறைத்துள்ளனர். இன்று உடற்கூறாய்வுக்கு பிறகு அவரின் உடல் குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சுஹைல், அமீர் ஆகியோரை கொலை வழக்கு மற்றும் சாட்சியங்களை அழித்தல் ஆகிய வழக்குகளில் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். 

News Counter: 
100
Loading...

Ramya