ஆற்றில் மணல் அள்ளியபோது ஆற்று மணலில் புதைந்து வாலிபர் பலி

share on:
Classic

ஆரணியில் ஆற்றில் மணல் அள்ளியபோது திடீரென மணலில் புதைந்து ஒருவர் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் தன்னுடைய நண்பர்களுடன் ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் மணல் அள்ளச் சென்றார். அப்போது திடீரென சரிந்த மணலில் புதைந்து மூச்சுத் திணறி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்ற முயன்றபோது சேவூர் பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஆரணி - வேலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

இதையடுத்து, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து, ஆரணி பகுதியில் மணல் திருட்டும், உயிரிழப்பும் நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan