மருமகனை கொன்று பால்கனியில் புதைத்து அதின் மீது செடிகளை வளர்த்த நபர் கைது..!!

share on:
Classic

தன்னுடன் தங்க வந்த மருமகனை கள்ளக்காதல் சந்தேகத்தால் கொன்று, வீட்டு பால்கனியில் புதைத்த நபர், கொலை நடந்து மூன்று வருடங்களுக்கு பிறகு பிடிப்பட்டுள்ளார்.

கூட தங்க வந்த மருமகன் 
ஒடிசாவை சேர்ந்த பிஜய் குமார் என்பவர் IT துறையில் வேலை பார்த்து வந்தார். அவரது காதலி டெல்லிக்கு குடிபெயர அவரும் டெல்லிக்கு சென்று அவருடன் தங்க ஆரம்பித்தார். எல்லாம் சுமுகமாக போய் கொண்டிருக்க ஊரிலிருந்து அவரது மருமகன் முறை வேண்டிய ஜெய் பிரகாஷ் அவருடன் தங்கி வேலை பார்க்க டெல்லிக்கு வந்துள்ளார். மூன்று பெரும் சேர்ந்து ஒரே வீட்டில் தங்க ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகத்தில் நடந்த கொலை 
பிஜய் ஐடி துறையில் வேலை செய்யவதால் பல நேரங்களில் வீட்டில் இருப்பதில்லை. இந்த நேரத்தில் தான் அவரின் காதலிக்கும் ஜெய் பிரகாஷுக்கும் நெருக்கம் அதிகமானது. இது பிஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மிகுந்த கோபத்தில் இருந்த பிஜாய் ஒரு நாள் ஜெய் தூங்கும் பொது அவரது தலையில் பேன் மோட்டாரை கொண்டு தாக்கி அவரை கொன்றுள்ளார்.

பின்பு அவரது சடலத்தை பல அடுக்கு துணிகளை கொண்டு சுற்று தனது வீடு பால்கானியிலேயே புதைத்து அதன் மீது செடிகளை வளர்த்து அடையாளம் தெரியாமல் பார்த்து கொண்டு வந்துள்ளார். இந்த சம்பவத்துக்கு பிறகு பிஜய்யும் அந்த வீட்டை காலி செய்துள்ளார். 

காட்டிக்கொடுத்த எலும்பு கூடு 
மேலும் தனது மொபைல் நம்பர் மற்றும் வாங்கி கணக்கு முதற்கொண்டு மாற்றியுள்ளார். ஜெய் பிரகாஷ் காணாமல் போய்விட்டதாக நினைத்த உறவினர்கள் அவரை தேடி வந்தனர். இந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை புதுப்பிக்க, எலும்பு கூடு ஒன்று கிடைத்துள்ளது. விசாரணையின்போது, அது காணாமல் போன ஜெய் பிரகாஷின் எலும்பு கூடு தான் என்று கண்டறியப்பட்டது. சதேகத்தின் பேரில் பிஜாய் குமாரை தேடிய போலீஸ் அவரை கண்டுபிடித்து விசாரித்த போது, தான் செய்த குற்றத்தை பிஜய் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind