சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை..குற்றவாளிக்கு தூக்கு தண்டனை..!

share on:
Classic

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து போபால் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.  

மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த மாதம் 8-ம் தேதி கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு போம்ரா என்ற இளைஞர் அந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார்,  விஷ்ணு போம்ராவை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்த போபால் நீதிமன்றம், குற்றவாளி விஷ்ணு போம்ராவுக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. சம்பவம் நடந்த ஒரு மாதத்திலேயே வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind