நாய் உள்ளிட்ட உயிரினங்களை விஷம் வைத்து கொன்ற இளைஞர்..!

share on:
Classic

சேலத்தில் நாய்களுக்கு விஷம் வைத்து கொள்ளப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளி அருகே 2 தெருக்களில் குமார் என்ற இளைஞர் கோழிக்கறியில் விஷம் கலந்து வைத்துள்ளார். இதனால் அப்பகுதியில் இருந்த பன்றிகள், நாய்கள், பூனைகள், கோழிகள் மற்றும் காக்கா உள்பட 50க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் இறந்தன. குமார் தோட்டதில் வளர்த்த ஆட்டை அங்கிருந்த நாய் கடித்தது சம்பந்தமாக இரு தரப்பினருக்கும் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் குமார் இரவோடு இரவாக அப்பகுதியில் இருக்கும் உயிரினங்களுக்கு கோழிக்கறியில் விஷம் கலந்த கொடுத்தது விசாரனையில் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து மேலும் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்

 

News Counter: 
100
Loading...

aravind