300ரூ. கடனை திரும்ப தராதவர் அடித்துக் கொலை..விருப்புரத்தில் கொடூரம்...!

Classic

திருக்கோவிலூர் அருகே 300 ரூபாய் பணத்தை திரும்ப தராதால் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் எடையூரைச் சேர்ந்த ஆறுமுகம், அதே  பகுதியை சேர்ந்த மேகவரணத்திடம் 300 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். இந்த நிலையில் வாங்கிய பணத்திற்கு பதிலாக மேகவரணத்திற்கு ஆறுமுகம் தமது மாட்டு வண்டி வைத்து வேலை செய்து கழித்துள்ளார். 

இந்த நிலையில் ஆறுமுகத்திடம் 300 ரூபாயை மேகவரணம் திருப்பிக்கேட்டபோது, இருவருக்கும் இடையே கைகலப்பாகியுள்ளது.  இதில் அருகாமையில் நின்றிருந்த மேகவரணத்தின் மருமகன் ராமதாஸ், ஆறுமுகத்தை அருகில் இருந்த உருட்ட கட்டையால் தாக்கியபோது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

News Counter: 
100

aravind