'வாட்ஸ்ஆப்' மூலம் புத்தகம் எழுதியவருக்கு, இலக்கியத்திற்கான 'உயரிய' விருது....!!

share on:
Classic

ஆஸ்திரேலியாவில் வெளிவர முடியாத தீவு ஒன்றில் ஆறு வருடமாக அடைத்து வைக்கபட்ட அகதி ஒருவர் வாட்ஸ்ஆப் மூலம் எழுதிய கதைக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய இலக்கிய விருது கிடைத்துள்ளது.

தீவு முகாம்:

"பெஹ்ரௌஸ் பூச்சாணி" என்பவர் ஒரு சிறு படகை திருடிய குற்றதிற்காக கடந்த ஆறு வருடங்களாக ஆஸ்திரேலியாவில் இருக்கும் பசிபிக் தீவு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இப்படி அகதிகளாக வரும் பலரும் இந்த மாதிரி தீவு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வெளியுலகுடன் இவர்களுக்கு எந்த தொடர்பும் இருக்காது. வேற்று மனிதர்கள் யாரும் அனுமதியில்லாமல் அங்கு வரவும் முடியாது. இங்கு மட்டும் இல்லை ஆஸ்திரேலியாவில் இது போன்று மூன்று தீவு முகாம்களில் பல ஆயிர கணக்கான அகதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

வாட்ஸ்ஆப்பில் எழுதிய கதை :

இந்நிலையில் தான் பூச்சானிக்கு அந்த எண்ணம் தோன்றியுள்ளது. ஒரு புத்தகம் எழுத ஆரம்பித்தார். மொத்தமாக இல்லாமல் ஒரு ஒரு அதிகாரமாக எழுதினார். இதற்கு அவர் எடுத்து கொண்ட ஆயுதம் தான் வாட்ஸ்ஆப். இரானிய மொழியில் எழுதிய கதைகளை ஆஸ்திரேலியாவில் இருந்த ஒரு மொழிபெயர்பாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் அதை மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். "No Friends but the Mountains" என்னும் அவரது அவரது புத்தகம் அனைவரையும் ஈர்க்க கொஞ்ச நாட்களிலேயே பிரபலம் அடைய தொடங்கினார்.

 

எனக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை !

இந்நிலையில் தான் அவரது புத்தகத்துக்கு ஆஸ்திரேலியாவைன் இலக்கிய பிரிவுக்கு கிடைக்கும் மிக உயரிய விருதான விக்டோரியா விருது கிடைத்துள்ளது. அதனோடு 50 லட்சம் பரிசு தொகையும் வழங்க பட்டுள்ளது.இது பற்றி பூச்சாணி கூறும் போது "இந்த வெற்றி தனக்கு எந்த வித மகிழ்ச்சியையும் தர வில்லை. இந்த மாதிரி தீவு முகாம்களில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் அவதி பட்டு கொண்டிருக்க இதை கொண்டாடும் எண்ணத்தில் நான் இல்லை . பல நேரங்களில் எங்கே எனது மொபைல் போன் காவலாளர்களால் பிடுங்க படுமோ என்று கவலை பட்டுள்ளேன். இது முழுக்க முழுக்க ஆஸ்திரேலிய அரசாங்கத்தை அசிங்கப்படுத்தும் வெற்றியாக தான் பார்க்கிறேன் "என்று கூறியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

sankaravadivu