இருப்பிடச் சான்று பெற சென்ற தந்தை தாசில்தார் அலுவலகத்தில் உயிரிழப்பு...

share on:
Classic

திருத்தணியில் உள்ள பள்ளிபட்டியில் இருப்பிடச் சான்று பெற சென்றவர் தாசில்தார் அலுவலகத்தில் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி பொதட்டூர்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது மகனை உயர் கல்வியில் சேர்க்க, இருப்பிடச் சான்று கேட்டு தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இருப்பினும் மனு மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் தினமும் காலை முதல் மாலை வரை தாசில்தார் அலுவலகத்தில் காத்திருந்து வீடு திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வந்த அவர், வெயிலின் தாக்கத்தால் தாசில்தார் அலுவலகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

News Counter: 
100
Loading...

Ragavan