ப்ரீமியர் லீக் கால்பந்தாட்டம் : லெய்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி அணி

share on:
Classic

இங்கிலாந்தில் நடைபெற்ற ப்ரீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றிபெற்றது.

இங்கிலாந்தின் எத்திஹாத் மைதானத்தில் நடைபெற்ற ப்ரீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டியுடன் லெய்செஸ்டர் சிட்டி அணி மோதியது. அனல் பறந்த முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினர். கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரமாக போராடின.

முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் முடிந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் கடும் போட்டிக்கிடையே சிறப்பாக விளையாடிய மான்செஸ்டர் சிட்டி வீரர் கோம்பனி 70வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

ஆட்டநேர முடிவில் மான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

 

News Counter: 
100
Loading...

Ragavan