'பொன்னியின் செல்வன்' கதையை படமாக எடுக்கும் மணி ரத்னம்

Classic

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனும் அவரது மருமகள் ஐஸ்வர்யா ராயும் இணைந்து நடிப்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படமாகும் பொன்னியின் செல்வன்
மிக பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படத்தில் நடிக்க தென்னிந்தியாவை சேர்ந்த பல பெரிய நடிகர்களிடம் இயக்குனர் மணி ரத்னம் பேசி வருகிறாராம்.இந்த படத்தின் கதை தமிழில் எழுத்தாளர் 'கல்கி கிருஷ்ணமூர்த்தி' எழுதிய 'பொன்னியின் செல்வன்' கதையை மையமாக கொண்டது.

பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க வேண்டும் என்பது மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது. அந்த கனவை நனவாக்கும் முயற்சில் தான் தற்போது அவர் இறங்கியுள்ளார்.

ரெடியாகும் நடிகர் பட்டாளம் 
தமிழில் ஐஸ்வர்யா ராயை அறிமுகம் செய்த மணிரத்னம், இந்த படத்தில் நடிப்பது பற்றி அவரிடம் பேசிய போது, வேறு எதுவுமே கேட்காமல் ஒகே சொல்லிவிட்டாராம் ஐஸ்வர்யா ராய். இந்த படத்தில் ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை எடுத்து முடிக்க பல வருட காலங்கள் ஆகும் என்ற நிலையில் இதில் நடிப்பதற்காக  நடிகர்கள் தேதிகளை ஒதுக்கி வருகின்றனர். ஐந்து பாகங்களை கொண்ட பொன்னியின் செல்வன் புத்தகத்தை மூன்று பாகங்களாக எடுக்க இப்போதைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கான வேலைகளை வேகமாக செய்து வருகிறார் இயக்குனர் மணிரத்னம். பல படங்களில் அமிதாப்பும் ஐஸ்வர்யா ராயும் ஒன்று சேர்ந்து நடித்திருக்க, இவர்கள் கடைசியாக நடித்த படம் 'சர்க்கர் ராஜ்' என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

aravind