மணிரத்னம், ஷங்கர், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை... மனம் திறந்த நடிகர்..

share on:
Classic

மணிரத்னம், ஷங்கர், விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே தனது ஆசை என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். 

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. நாடு முழுவதும் பெரிதாக பேசப்பட்ட இந்தப் படம் தற்போது ஹிந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் ரீ மேக்காகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கில் தான் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வரும் 26-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தற்போது பிசியாக உள்ளார் விஜய் தேவரகொண்டா. இதுதொடர்பான நிகழ்ச்சிகயில் கலந்துகொண்டு பேசிய அவர் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியின் ஷில்பா கதாபாத்திரம் தன்னை வெகுவாக கவர்ந்ததாகவும், ஒரு படத்திலாவது அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் இயக்குனர் மணிரத்னம் படத்திலும் தனக்கு நடிக்க ஆசை உள்ளதாகவும் தெரிவித்த அவர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுள்ளதாகவும் அவர் கூறினார். 

News Counter: 
100
Loading...

Ramya