பிரசாரத்தின் போது மயங்கி விழுந்த மன்சூர் அலிகான்..!

share on:
Classic

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மன்சூர் அலிகான் நத்தம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டபோது மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள புன்னப்பட்டி, கோமணாம்பட்டிஉள்ளிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான் வாக்கு சேகரித்தார். அவர் கோமணாம்பட்டியில் வாக்கு சேகரித்துகொண்டிருந்தபோது, திடீரென மயக்கமடைந்தார். அப்பகுதி மக்கள் அவருக்கு தண்ணீர் மற்றும் குளிர்பாணம் கொடுத்து உதவினர். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து குணமான மன்சூர் அலிகான் மீண்டும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கத் தொடங்கினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

News Counter: 
100
Loading...

aravind