சாலை போடும் வாகனங்களுக்கு தீவைத்த மாவோயிஸ்ட்டுகள்

share on:
Classic

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாலை கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டிருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்களை மாவோயிஸ்ட்டுகள் தீவைத்து எரித்தனர்

ராம்கர் மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணிக்கும் நடைபெற்று வருகிறது. இதற்காக ஏனிகாம் என்ற நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சாலை போடும் இடத்திற்கு ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்த மாவோயிஸ்ட்டுகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீவைத்ததாக தெரிகிறது. இதில் ஜேசிபி, வேன், லாரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்

 

News Counter: 
100
Loading...

aravind