உலகக்கோப்பை : ஆஸி அணியில் மாற்றம்... வீரர் விலகலா..?

share on:
Classic

நடந்து வரும் உலகக்கோப்பையில் ஆஸி அணி வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என ஆஸ்திரேலிய அணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

கடந்த 9-ஆம் தேதி இந்திய, ஆஸிதிரேலிய அணிகள் பங்கேற்ற உலகக்கோப்பை லீக் ஆட்டம் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்றது. அன்றைய ஆட்டத்தில் காயம் அடைந்த இந்திய வீரர் தவான் காயம் காரணமாக உலகக்கோப்பையில் இருந்து விலகிய நிலையில், அன்றைய ஆட்டத்தில் காயமடைந்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் காயம் காரணமாக வரும் சனிக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க்க மாட்டார் என ஆஸி அணியின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள்து. மேலும் அவருக்கு பதிலாக மிட்செல் மார்ஷ் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.     

News Counter: 
100
Loading...

Saravanan