ரோஜர்ஸ் கோப்பை : மரியா சரபோவா அதிர்ச்சி தோல்வி

share on:
Classic

கனடாவில் நடைபெற்ற ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில்  மரியா சரபோவா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெற்றது. இதில் நட்சத்திர வீராங்கனையான ரஷ்யாவின் மரியா சரபோவாவுடன் எஸ்டோனியாவின் அனெட் கோண்டாவெய்ட் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற முதல் செட் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சரபோவா 6 - 4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் மனம் தளராது போராடிய கோண்டாவெய்ட், 6 - 3 என்ற செட் கணக்கில் 2வது செட்டை தன்வசமாக்கினார்.

அனல் பறந்த 3வது செட் ஆட்டத்தை கைப்பற்ற இரு வீராங்கனைகளும் கடுமையாக போராடினர். இறுதியில் 6 - 4 செட் கணக்கில் நட்சத்திர வீராங்கனையான சரபோவாவை வீழ்த்தி கோண்டாவெய்ட் வெற்றிபெற்றார்.

 

News Counter: 
100
Loading...

aravind