பதவியிலிருந்து விலகப்போவதில்லை -  மார்க் ஸக்கர்பர்க் திட்டவட்டம்

share on:
Classic

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை பதவியிலிருந்து விலகப்போவதில்லை என மார்க் ஸக்கர்பர்க் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  

'கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா' நிறுவனம் மூலம் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு, கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது, ஃபேஸ்புக் நிறுவனத்திற்கும், அதன் தலைவர் மார்க் ஸக்கர்பர்கிற்கும் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. 

இதைத்தொடர்ந்து, ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் பதவியை ஸக்கர்பர்க் ராஜினாமா செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தத் தொடங்கினர். இந்நிலையில், தமது பதவியை ஒருபோதும் ராஜினாமா செய்யப்போவதில்லை என ஸக்கர்பர்க் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

மேலும், பதவி விலகும் திட்டம் குறித்து இப்போதைக்கு யோசிக்கவே போவதில்லை என்றும், ஃபேஸ்புக்கின் அடுத்த பரிமாணத்தை நோக்கியே தமது முழுகவனமும் இருப்பதாகவும் கூறியுள்ளார். முன்னதாக, கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஸக்கர்பர்க் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind