மார்டினின் காசாளர் பழனிசாமி உயிரிழந்த வழக்கு : தமிழக அரசுக்கு உத்தரவு

share on:
Classic

மர்மமான முறையில் இறந்து போன லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் பழனிச்சாமி உடலில் உள்ள ரத்த காயங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாட்டரி அதிபர் மார்டினின் காசாளர் பழனிசாமியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது மகன் ரோஹின் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் தனது தந்தையின் உடலில் காயங்கள் இருப்பதால், கொலைக்கான வாய்ப்பு இருப்பதாகவும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தார். அப்போது, பழனிச்சாமியின் சடலத்தின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இந்த அறிக்கையில் திருப்தி அடையாத நீதிபதிகள், பழனிச்சாமியின் உடலில் உள்ள காயங்கள் அவர் உயிரோடு இருக்கும்போது ஏற்பட்டதா? அல்லது அவர் இறந்த பிறகு யாரேனும் காயங்கள் ஏற்படுத்தினார்களா? என கேள்வி எழுப்பினர். பழனிச்சாமியின் உடல் பதப்படுத்தப்பட்டுள்ளது குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து, முழுமையான விளக்கங்களுடன் நாளை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை விசராணையை நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan