மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரணம் தொடர்பான வழக்கு : சிபிசிஐடிக்கு மாற்ற முடியாது என நீதிமன்றம் உத்தரவு..

share on:
Classic

மார்ட்டின் உதவியாளர் பழனிச்சாமியின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற முடியாது என்று கூறிய நீதிமன்றம், மாஜிஸ்திரேட் விசாரிக்கவும் உத்தரவிட்டனர். 

லாட்டரி அதிபர் மார்ட்டின்  வீடு, அலுவலகங்களில் ஏப்ரல் 30ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அவரது ஹோமியோபதி கல்லூரி காசாளரான பழனிச்சாமியிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, கடந்த 3ம் தேதி காரமடை எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகேயுள்ள குட்டையில் காசாளர் பழனிசாமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து, தந்தையின் உடலில் ரத்த காயங்கள் இருப்பதாலும் கொலைக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரியும் பழனிச்சாமியின் மகன்  ரோஹின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையின் போது பழனிச்சாமி மரணம் தொடர்பான விரிவான அறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து பழனிச்சாமி மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற முடியாது என தெரிவித்த நீதிபதிகள், மாஜிஸ்ட்ரேட் விசாரிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். மேலும் மறு உடற்கூறாய்வு குறித்து குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடமே முறையிட வேண்டும் என்றும், பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பழனிச்சாமியின் உடலை காண குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

News Counter: 
100
Loading...

Ramya