அடுத்தடுத்து வெளியாகும் மார்வெல் படங்களின் ட்ரெய்லர்கள்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

share on:
Classic

மார்வெல் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் மார்வெல் என்டர்டென்மெண்ட் நிறுவனம். 

அவெஞ்சர்சின் இறுதி பாகத்திற்கு காத்திருப்பு
 

ஹாலிவுட்டில் தயாராகும் பிரம்மாண்ட படங்களில் மார்வெல் மற்றும் DC காமிக் படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உலகமெங்கும் உள்ளனர். இதில் மார்வெல் ரசிகர்கள் தற்போது அவெஞ்சர்ஸ் படத்தின் இறுதி பாகத்திற்காக ஆவளோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். தனி தனி சூப்பர் ஹீரோக்களை ரசித்து வந்த சினிமா ரசிகர்களுக்கு 2012-ஆம் ஆண்டு வெளியான 'தி அவெஞ்சர்ஸ்' பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கி உலக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. 

 

அன்ட்மேன்,  அண்ட் தி வாஸ்ப்

பின்னர் அவெஞ்சர் படங்களின் கிளை கதைகளாக அவ்வப்போது சில மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களும் ஹாலிவுட்டில் வெளியானது. ஒவ்வொரு மார்வெல் படங்களின் இறுதியில் காட்சி படுத்தப்படும் பைனல் கிரெடிட் சீனை மையமாக வைத்து தான் அடுத்த பாகத்திற்கான கதையும் இடையே வெளியாகும் கிளை கதைகளும் அமைக்கப்படும். அப்படி இதன் இறுதி பாகத்திற்கும் "அன்ட்மேன்,  அண்ட் தி வாஸ்ப்" மற்றும் "கேப்டன் மார்வெல்" போன்ற கிளை கதைகள் உள்ளன.
 

 

 இதில் அன்ட்மேன் படம் வெளியாகி சுமாரான வசூலையே உலகெங்கும் வசூலித்திருந்தாலும் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வாரின் பைனல் கிரெடிட் சீனை இறுதியில் தொடர்பு படுத்தி கேப்டன் மார்வெல் கதாப்பாத்திரத்தை விடுதலை செய்ததிருந்தது.

கேப்டன் மார்வெல் ட்ரெலைர்

அதை தொடர்ந்து தற்போது கேப்டன் மார்வெல் கதாப்பாத்திரத்திற்கான திரைப்படம் வருகிற மார்ச் மாதம் வெளியாகவிருக்கிறது அதன் தொடர்ச்சியாக உலக மக்கள் ஆவளோடு எதிர்நோக்கி காத்திருக்கும் அவெஞ்சர்ஸ் படத்தின் நான்காம் பாகம் வெளியாகவிருக்கிறது. முன்னதாக இவ்விரு படங்களில் ட்ரெய்லரையும் இந்த வாரம் வெளியிட மார்வெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது, அதன்படி கேப்டன் மார்வெல் படத்தின் ட்ரெய்லர் தற்போது நடைபெற்று வரும் கால் பந்தாட்ட போட்டியின் இடைவேளையில் வெளியிட்டுள்ளனர்.
 

Everything begins with a hero. Watch the brand-new trailer for Marvel Studios’ #CaptainMarvel. In theaters March 8, 2019. pic.twitter.com/o1zqgcg90t

— Marvel Studios (@MarvelStudios) December 4, 2018

 

 

அவெஞ்சர்ஸ் 4

அவெஞ்சர்ஸ் நான்காம் பாகத்தின் ட்ரெய்லரை வருகிற புதன் கிழமை காலை 7 மணிக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்வெல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இரண்டு முக்கிய படங்களின் ட்ரெய்லர்கள் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து வெளியாவது அவர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

News Counter: 
100
Loading...

aravind