"சுமூகமாக முடிந்தது முதற்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை" கே.பாலகிருஷ்ணன்

share on:
Classic

அதிமுக கூட்டணியை 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தோற்கடிக்கும் என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிற சந்தர்ப்பவாத பண பலத்தை அடிப்படையாக கொண்டிருக்கிற ஊழல்வாதிகள் ஒன்று பட்ட கூட்டணியாக இருக்கிற பாஜக, அதிமுக, பாமக கூட்டணியை தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் முறியடித்து திமுக தலைமையிலான கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.  கூட்டணி குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.  நிச்சயமாக ஒரு நல்ல முடிவு ஏற்படும்" என அவர் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

sajeev