சர்வதேச தீவிரவாதப் பட்டியலில் மசூத் அசார் : சீனாவின் நிலைப்பாடு என்ன..?

share on:
Classic

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாத பட்டியலில் சேர்க்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் முயற்சிக்கு இந்த முறை சீனா எதிர்ப்பு தெரிவிக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது. 

புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை இந்தியாவில் நடத்திய ஜெயிஷ் இ அமைப்பின் தலைவர் மசூத் அசார் பெயரை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அமெரிக்கா சென்ற இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே அந்நாடு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை சந்தித்தார். மசூத் அசாத் குறித்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் மசூத் அசார் குறித்து சீனா வெளியுறவு அமைச்சகம் குறித்து சீனா கருத்து தெரிவித்துள்ளது. மசூத் அசார் பெயரை ஐநாவின் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்க அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவை சீனா எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீனா மசூத் அசார் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் சேர்க்க முயற்சி மேற்கொண்ட போது பலமுறை சீனா அந்த முயற்சியை தடுத்தது குறிப்பிடத்தக்கது.
 

News Counter: 
100
Loading...

Ramya