"மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி" ஐ.நா. அதிரடி 

share on:
Classic

புல்வாமா உள்ளிட்ட இந்தியாவில் நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா அறிவித்துள்ளது.

இந்தியாவில் மும்பை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு மசூத் அசார் முளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக்கோரி ஐ.நாவில் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐ.நா நிரந்தர உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், சீனா தொடர்ந்து முட்டுகட்டையிட்டு வந்தது. 

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நாவில் பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.  அழுத்தம் அதிகரித்த காரணத்தால் சீனாவும் ஆதரவு தெரிவித்தது. இதனையடுத்து மசூத் அசாரை சர்வதேச குற்றவாளியாக ஐ.நா அறிவித்துள்ளது. இதன்மூலம் மசூத் அசாரின் இயக்கம் உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டு, இயக்கத்துக்கு நிதி பெறும் நடவடிக்கையும் முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானும் அவனை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind